மார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
- வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால மார்ச் 17 அன்று எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள்; எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
- வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால மார்ச் 17 அன்று எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள்; எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
(1 / 8)
கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் தலை எழுத்து தீர்மானிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. திங்கட்கிழமை சிவபெருமானை வழிபட உகந்த நேரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்து மத நம்பிக்கைகளின்படி, சிவபெருமானை வழிபடுவதால் துக்கம் மற்றும் சங்கடம் நீங்குகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, வரும் மார்ச் 17ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
மார்ச் 17அன்று எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். யார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையின் வாயிலாகத் தெரிந்துகொள்வோம். வரும் மார்ச் 17அன்று துலாம் முதல் மீனம் வரையிலான ராசியினருக்கான பலன்களைக் காண்போம்.
(2 / 8)
துலாம்: துலாம் ராசியினர், நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க மார்ச் 17ஆம் தேதி நல்ல நாளாக இருக்காது. எனவே, எச்சரிக்கையாக இருங்கள். விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலுடன் தொடர்புடையவர்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பெண் ராசிக்காரர்கள் பெற்றோரின் ஆதரவை எதிர்பார்க்கலாம்.
(3 / 8)
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு, பணத்தின் அடிப்படையில் இது ஒரு நல்ல நாள் ஆகும். காதல் வாழ்க்கையில் பெரும்பாலும் சரியான தகவல் தொடர்பு இல்லாததால் சிக்கல்கள் இருக்கலாம். எனவே, வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் சுமுகமாகப் பேசுங்கள். உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைக் காண்பீர்கள். காலையில் யோகா மற்றும் சில லேசான உடற்பயிற்சிகள் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
(4 / 8)
தனுசு: தனுசு ராசிக்காரருக்கு மார்ச் 17ஆம் தேதி வியாபாரத்தில் பணம் திரட்டுவதில் சிக்கல் ஏற்படலாம். வயதானவர்கள் வழுக்கும் இடங்களில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் காதலருடனான உங்கள் தொடர்பு நன்றாக இருக்கும். அலுவலக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.
(5 / 8)
மகரம்:
மகர ராசியினர் சிலருக்கு உடன்பிறப்புகளால் பண உதவி கிடைக்கும். உங்கள் காதலருக்கு தனிப்பட்ட இடத்தை வழங்க வேண்டும். புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரான உணவை நீங்கள் உண்ண வேண்டும். மகர ராசியினருக்கு, தொழில் வாழ்க்கை ஆக்கப்பூர்வமாக இருக்கும்.
(6 / 8)
கும்பம்: கும்ப ராசியினரான, நீங்கள் உங்கள் தொழிலில் சாதகமான முடிவுகளைக் காண்பீர்கள். இரவில் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. நீங்கள் படைப்புத் துறையில் இருந்தால், நீங்கள் விமர்சனங்களையும் சந்திக்க நேரிடும்.
(7 / 8)
மீனம்: மீன ராசிக்காரரான இவர், உங்கள் துணையுடனான உரையாடலின் போது உங்கள் கட்டுப்பாட்டை இழக்க வேண்டாம். திருமணமான மீன ராசிக்காரர்கள் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபடக் கூடாது. இது வாழ்க்கையில் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும். பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும்.
(8 / 8)
பொறுப்புத்துறப்பு - இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்