Mercury Transit: மகரத்தில் பெயர்ச்சியான புதன்.. நான்கு ராசிகளுக்கு அடுத்த இரண்டு வாரம் அதிர்ஷ்ட மழை
- Mercury Transit in Capricorn: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடிய புதன் தனது ராசியை மாற்றியிருப்பதன் விளைவாக நான்கு ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
- Mercury Transit in Capricorn: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடிய புதன் தனது ராசியை மாற்றியிருப்பதன் விளைவாக நான்கு ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
(1 / 7)
கிரகங்களின் அதிபதி என்று அழைக்கப்படும் புதன் மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் முதன்மை இடத்தில் வகிப்பவராக புதன் இருக்கிறார்
(2 / 7)
புதன் பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை மதியம் வரை மகர ராசியில் இருப்பார். இதன் விளைவாக நான்கு ராசிகள் நல்ல பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என கூறப்படுகிறது. எந்தெந்த ராசிகள் புதன் பெயர்ச்சியால் நல்ல பலன்களை பெற போகிறது என்பதை பார்க்கலாம்
(3 / 7)
மேஷம்: இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்கள் அதிக லாபத்தில் திளைப்பார்கள். பொருளாதார நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும், சொந்த தொழில் செய்வோருக்கு வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்
(4 / 7)
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரும். இந்த காலகட்டத்தில், எடுத்த காரியங்களிலும் வெற்றியும், நன்மைகளும் கிடைக்கும். நிதி விஷயங்களில் லாபம் கிடைக்கும். திட்டமிட்ட செயல்களில் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம். வணிகர்கள் லாபம் அடைவார்கள்
(5 / 7)
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் நன்மையை பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் லாபம் மற்றும் புதிய ஒப்பந்தங்களுக்கு அதிக வாய்ப்புகளைப் பெறலாம். தங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவார்கள். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்
(6 / 7)
ரிஷபம்: மகர ராசியில் புதனின் பெயர்ச்சி ரிஷப ராசிக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டை பெறுவீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், நிதி நிலைமை நன்றாக இருக்கும். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படும்
(7 / 7)
குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஜோதிடர்கள்/ வாஸ்து நிபுணர்கள்/ பஞ்சாங்கங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்
மற்ற கேலரிக்கள்