Honey Benefits in Summer : ‘தேன் தேன் தேன் உனை தேடி அலைந்தேன்’ ஒரு துளி தேன் உங்களுக்கு எத்தனை நன்மைகளை தருகிறது பாருங்க
- Health Benefits of Honey : கோடைக் காலத்தில் தேன் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
- Health Benefits of Honey : கோடைக் காலத்தில் தேன் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
(1 / 11)
பல மலர்களில் இருந்து தேன் துளிகளை தேனீக்கள் சேகரிக்கின்றன. அதுதான் ஒவ்வொரு வகை தேனுக்கும் தனிச்சுவை மற்றும் தோற்றத்தை கொடுக்கிறது. ஒரு ஸ்பூன் தேனில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
(2 / 11)
சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்கிறது. இதில் உள்ள இயற்கையான நீர்ச்சத்துக்கள் மற்றும் ஈரத்தன்மையும், உங்கள் சருமம் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி அதை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
(3 / 11)
நீங்கள் தேனை உட்கொள்ளும்போது, தேன் உங்கள் உடலில் சிறிதளவு இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. உங்கள் மூளையில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலங்களை எளிதாக நுழைக்க உதவுகிறது. டிரிப்டோஃபன்கள் செரோட்டினின்களாகவும், பின்னர் மெலோட்டினின்களாகவும் மாறும். இது உறக்கத்தை முறைப்படுத்த உதவும்.
(4 / 11)
உங்கள் உடலில் கோடைக்காலங்களின் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்ஜைகளை எதிர்த்து போராட தேன் உதவும். தொற்றுக்களை எதிர்த்து போராடி, உங்கள் உடலின் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது.
(5 / 11)
கோடை காலத்தில் உடலின் உள் உறுப்புக்களுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி, கோடையில் உங்கள் உடலின் நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடாமல் காக்கிறது. தேனை தண்ணீரில் கலந்து பருகும்போது, உடலுக்கு தேவையான பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட உடலுக்கு ஆற்றலைக்கொடுக்கும் எலக்ட்ரோலைட்களை கொடுக்கிறது.இது உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது.
(6 / 11)
குறைவாக எடுக்கும்போது, இது உடல் எடை மேலாண்மைக்கும் உதவுகிறது. இதன் தனித்தன்மை வாய்ந்த கலவை மற்றும் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
(7 / 11)
கோடைக் காலத்தில் ஏற்படும் சளி மற்றும் அலர்ஜி போன்றவை தொண்டையில் கரகரப்பை ஏற்படுத்தும். அதற்கு தேன் நிவாரணம் தரும். இதன் இதமளிக்கும் தன்மை, தொண்டை எரிச்சலைப்போக்கும். இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கிறது.
(8 / 11)
தேனில் உள்ள இயற்கை சர்க்கரை, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. வெள்ளை சர்க்கரைக்கு மாற்றான மற்றும் அதன் தீமைகள் இல்லாத ஒன்று, உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது.
(9 / 11)
வயிறு உப்புசம் மற்றும் செரிமாக கோளாறுகள் கோடைக் காலத்தில் பொதுவாக பிரச்னைகள் ஆகும். ஆனால் தேன் அந்த அறிகுறிகளை அடித்துவிரட்டும். இதன் எண்சைம்கள் செரிமானத்தை அதிகரிக்கும். குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.
(10 / 11)
தேன் இயற்கை கிருமி நாசினியாக செயல்படுகிறது. தேன் தொற்றுகள் மற்றும் கிருமிகளிடம் இருந்து காக்கிறது. தேனில் உள்ள சர்க்கரை, பாக்டீரியாவில் இருந்து நீர்ச்சத்தை எடுத்துக்கொள்கிறது.
மற்ற கேலரிக்கள்