Cracked Heels Remedy: தொல்லை தரும் குதிங்கால் வெடிப்பு! வாழைப்பழ மாஸ்க் மூலம் வீட்டிலேயே எளிய தீர்வு
- கோடை காலத்தில் உடல் வறட்சி காரணமாக கால்களில் வெடிப்பு ஏற்படுவது இயற்கையானது தான். கால்களில் வெடிப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கான எளிமையான வழிகளை பார்க்கலாம்
- கோடை காலத்தில் உடல் வறட்சி காரணமாக கால்களில் வெடிப்பு ஏற்படுவது இயற்கையானது தான். கால்களில் வெடிப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கான எளிமையான வழிகளை பார்க்கலாம்
(1 / 6)
கோடை காலத்தில் நிலவும் வெப்பம், வியர்வை காரணமாக கால்களில் சாக்ஸ்கள் அணிவது கடினமான விஷயம் தான். எனவே சாக்ஸ்கள் கால்களில் மிருதுவாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது
(2 / 6)
கால்களில் வெடிப்பு ஏற்பட்டால் வாழைப்பழ மாஸ்க் சிறந்த தீர்வாக இருக்கும். கால்களில் வாழைப்பழத்தை தடவுவதால் உடனடி பலன் பெறலாம்
(3 / 6)
நன்கு பழுத்த பழத்தை எடுத்து அதை நன்கு மசித்து, அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து மிக்ஸ் செய்ய வேண்டும். வெடிப்பு இருக்கும் இடத்திலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் இந்த கலவையை தடவ வேண்டும்
(4 / 6)
வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய இந்த மாஸ்கை காலில் தடவிய பின் பாலிதீன் வைத்து கட்டி விட வேண்டும். அரை மணி நேரம் வரை அப்படியே விட்ட பின்னர் பாலிதீனை நீக்கி கால்களை நன்கு கழுவ வேண்டும்
(5 / 6)
இந்த வாழைப்பழ மாஸ்க் பேக்கை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தி வந்தால் கால்களில் ஏற்படும் வெடிப்பு காணாமல் போய்விடும். அத்துடன் பாதமும் மென்மையாகும்
(6 / 6)
பகல் நேரத்தில் மாஸ்டரைசர் கால்களில் தடவினால், இது குதிகால் மீது அதிக இறந்த சருமத்தை குவிக்கும். மாய்ஸ்சரைசர் காரணமாக, தூசி மற்றும் அழுக்குகள் விரைவாக சருமத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. இரவில் தூங்கும் முன் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த முயற்சிக்கவும். இது காலையில் உங்களுக்கு முற்றிலும் மென்மையான சருமத்தை கொடுக்கும்
மற்ற கேலரிக்கள்