Home Made Icecream: கோடை வெப்பத்தை தணிக்க கூல் ஐடியா! வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த ஐஸ்க்ரீம்கள் இதோ
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Home Made Icecream: கோடை வெப்பத்தை தணிக்க கூல் ஐடியா! வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த ஐஸ்க்ரீம்கள் இதோ

Home Made Icecream: கோடை வெப்பத்தை தணிக்க கூல் ஐடியா! வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த ஐஸ்க்ரீம்கள் இதோ

May 28, 2024 04:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 28, 2024 04:00 PM , IST

  • குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக ஐஸ்க்ரீம் இருந்து வருகிறது. அதில் கோடை வெப்பத்தை சமாளிக்க குளிர்ச்சி மிகுந்த ஸ்நாக்ஸ் வகையாக ஐஸ்க்ரீம் உள்ளது

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், உடலை குளிர்ச்சியாக வைக்கவும் ஆரோக்கியம் மிக்க பழங்களை கொண்டு எளிய முறையில் வீட்டிலேயே ஐஸ்க்கீரம்களை எப்படி தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம் 

(1 / 6)

கரும்பு ஐஸ்க்ரீம்: கரும்பை எடுத்து ஒரு கிளாஸ் அளவு சாறு ஆக்கி, அதில் தேங்காய் க்ரீம் சேர்த்து ஸ்மூத்தாக வரும் வரை பிளெண்ட் செய்ய வேண்டும். பின்னர் இந்த கலவையில் லேசாக மஞ்சள் சேர்த்து பிரிட்ஜ் பீர்ஸரில் வைக்க வேண்டும். பின்னர் ஐஸ்க்ரீமாக மாறியவுடன் அதை ஸ்கூப்பில் வைத்து பரிமாறலாம். டாப்பிங்காக நட்ஸ் மற்றும் செர்ரி பழங்களை சேர்க்கலாம்

(2 / 6)

சியா விதை ஐஸ்க்ரீம்: சியா விதைகளுடன், தேவைப்படும் அளவில் பாதாம் பால் சேர்த்து, ஸ்வீட் சுவைக்கு மேப்பிள் சிரப்பும் சேர்த்து புட்டிங் போல் ஆக்கி கொள்ள வேண்டும். இந்த கலவை நன்கு கெட்டியானவுடன் ப்ரீஸரில் வைத்து பின்னர் ஐஸ்க்ரீமாக பரிமாறலாம். ஒமேகா 3 சத்துக்கள் நிறைந்த ஐஸ்க்ரீமாக இது அமைந்திருக்கும்

(3 / 6)

அவகோடா ஐஸ்க்ரீம்: ஆரோக்கிய கொழுப்புகள் கொண்டிருக்கும் அவகோடா பழம் இயற்கையாகவே க்ரீம் தோற்றத்தை பெற்றதாக உள்ளது. இதில் தேங்காய் பால் சேர்த்து பிளெண்ட் செய்ய வேண்டும். அத்துடன் தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றையும் சேர்த்து ப்ரீஸரில் வைத்து பரிமாறலாம்

(4 / 6)

மாம்பழம், தேங்காய் ஐஸ்க்ரீம்: நன்கு பழுத்த மாம்பழத்தை சிறியதாக நறுக்கி அதில் தேங்காய் தண்ணீர், எலுமிச்சை சாறு கலந்து நன்கு பிளெண்ட் செய்ய வேண்டும். ஸ்மூத்தாக ஆனவுடன் ஐஸ்க்ரீம் மேக்கரில் சேர்த்து ப்ரீஸ் செய்ய வேண்டும். அவ்வளவுதான் சுவை மிகுந்த மாம்பழம் தேங்காய் ஐஸ்க்ரீம் தயார்

(5 / 6)

வாழைப்பழ ஐஸ்க்ரீம்: வாழைப்பழத்தை நன்கு மசித்து அதை ஸ்மூத்தாக க்ரீம் போல் வரும் வரை பிளெண்ட் செய்ய வேண்டும். பின்னர் இதை ப்ரீஸரில் வைத்து ஐஸ்க்ரீமாக சாப்பிடலாம். நட்ஸ், கொக்கா பவுடர், பெர்ரி என விருப்பமான டாப்பிங்ஸை சேர்த்து கொள்ளலாம் 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்