Home Gardening : மாடியிலோ அல்லது வீட்டிலோ சிறிய தோட்டம் அமைக்க வேண்டுமா? இதோ இந்த யோசனைகள் உதவும்!
- Home Gardening : மாடியிலோ அல்லது வீட்டிலோ சிறிய தோட்டம் அமைக்க வேண்டுமா? இதோ இந்த யோசனைகள் உதவும்!
- Home Gardening : மாடியிலோ அல்லது வீட்டிலோ சிறிய தோட்டம் அமைக்க வேண்டுமா? இதோ இந்த யோசனைகள் உதவும்!
(1 / 5)
இடத்தேர்வு - நீங்கள் வீட்டிலோ அல்லது மாடியிலோ சிறிய தோட்டம் அமைத்த முடிவெடுத்தால், நீங்கள் அதற்கு சரியான இடத்தை தேர்ந்தெடுக்கவேண்டும். ஏனெனில் செடிகள் வளர்வதற்கு ஏற்ற சூரியஒளி, காற்று என அனைத்தும் தாராளமாகக் கிடைக்கவேண்டும்.
(2 / 5)
தாவர வகை - நீங்கள் உங்கள் வீட்டில் சரியான இடத்தை தேர்ந்தெடுத்தவுடன், அடுத்த வேலை நீங்கள் அதில் வளர்க்கப்போகும் அல்லது நடவு செய்யபுபோகும் தாவர வகைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். நீங்கள் மலர்கள் நிறைந்த தோட்டத்தை அமைக்கப்போகிறீர்களா? அல்லது மூலிகை தாவர தோட்டமா அல்லது காய்கறிகள் தோட்டமா அல்லது அனைத்தும் கலந்ததா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.
(3 / 5)
மண் - தாவரங்கள் செழித்து வளரவேண்டுமெனில், நல்ல மண் வளம் வேண்டும். உங்கள் மண்ணின் குணம் என்ன என்பதை முதலில் பாருங்கள். அதை நீங்கள் கைகளால் நன்றாக பிசைய முடியவேண்டும். அது கடினமாக, களிமண் போல் இருந்தால், அனைத்து வகை தாவரங்களாலும் அதில் செழித்து வளர முடியாது. கற்கள் நிறைந்த மண் என்றாலும் கடினம்.
(4 / 5)
தோட்ட உபகரணங்கள் - நீங்கள் தோட்டம் அமைக்க முடிவெடுத்துவிட்டால், அதற்கான உபகரணங்களும் சரியானது இருக்கவேண்டும். கத்தரிக்கோல், பெரிதாக வளரும் செடிகொடிகளை நறுக்கத் தேவை, தேவையற்ற பகுதிகளையும் நறுக்கி தூக்கி எறிந்துவிடலாம்.
(5 / 5)
செடிகளை தேர்ந்தெடுங்கள் - இதுதான் உங்கள் தோட்டம் அமைப்பதில் மிகவும் முக்கியமான நிலை, நீங்கள் தோட்டமிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், உடனடியாக அதில் என்ன தாவங்கள் நடவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது. எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் தாவரங்கள் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
மற்ற கேலரிக்கள்