Home Decors : உங்கள் வீட்டு குழந்தைகளின் அறையை எப்படி அலங்கரிக்கலாம்? இதோ இந்த ஐடியாக்கள் உதவும்!-home decors how to decorate your kids room at home here are some ideas to help - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Home Decors : உங்கள் வீட்டு குழந்தைகளின் அறையை எப்படி அலங்கரிக்கலாம்? இதோ இந்த ஐடியாக்கள் உதவும்!

Home Decors : உங்கள் வீட்டு குழந்தைகளின் அறையை எப்படி அலங்கரிக்கலாம்? இதோ இந்த ஐடியாக்கள் உதவும்!

Aug 14, 2024 07:40 AM IST Priyadarshini R
Aug 14, 2024 07:40 AM , IST

  • Home Decors : உங்கள் வீட்டு குழந்தைகளின் அறையை எப்படி அலங்கரிக்கலாம்? இதோ இந்த ஐடியாக்கள் உதவும்!

சுவர் - சுவரை நீங்கள் ஸ்டிக்கர்கள் ஓட்டி அலங்கரிக்கலாம். அவை குழந்தைகளை கவரும் வகையில் இருக்கலாம். ஸ்டிக்கர்களை நீங்கள் எளிதாக அகற்ற முடியும். அதனால் உங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு ஸ்டேஜ்க்கும் ஏற்ப ஸ்டிக்கர்களை நீங்கள் ஒட்டலாம் மற்றும் அகற்றலாம். இவை உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன்களாக இருக்கலாம். அது அவர்களை மேலும் கவர்ந்து இழுக்கும் அல்லது மலைகள், ராக்கெட் போன்ற குழந்தைகளின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தால், இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

(1 / 10)

புத்தக அலமாரிகள் - உங்கள் குழந்தைகளின் புத்தக அலமாரிகள், இன்னும் சிறியதாக இருக்கவேண்டும். அதில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த புத்தகங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு எட்டக்கூடியதும், மரத்தாலான, மடித்து வைக்க ஏதுவானதுமாக இருக்கவேண்டும். உங்கள் புத்தக அலமாரியில் புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கவேண்டும். சிலவற்றில் விளையாட்டு பொம்மைகள் மற்றும் ஜாமான்களையும் அடுக்கி வையுங்கள்.

(2 / 10)

சிறிய அட்டைப் பெட்டிகள் - நீங்கள் சில சிறிய அட்டைப்பெட்டிகளை பல்வேறு சைஸ்களில் வாங்கிக்கொள்ளுங்கள். அவற்றில் வண்ணம் பூசி, லேஸ் ஒட்டி என அலங்காரம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் குழந்தைகளின் விளையாட்டு சாமான்களை அடுக்கி வைத்துக்கொள்ள பயன்படுத்துங்கள். அறையும் சுத்தமாக இருக்கும். இவையும் பார்ப்பவர்களை கவர்ந்து இழுப்பதாக இருக்கும்.

(3 / 10)

படுக்கை அறை விளக்கு - உங்கள் குழந்தையின் படுக்கைக்கு அருகில் உள்ள டேபிளிலி வைக்கும் விளக்கு, அழகானதாக மட்டும் இருந்தால் போதாது. அது எளிதில் இயக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும். உங்களுக்கு 10 வயதுக்குள் குழந்தை இருந்தால், இந்த விளக்கு உங்களுக்கு மிகவும் உதவியானது. இரவில் சில குழந்தைகள் விழித்துக்கொண்டு அழுவார்கள். அவர்களின் அச்சத்தைப்போக்க இதை நீங்கள் எளிதாக போட்டுக்கொள்ளலாம்.

(4 / 10)

மிருதுவான தரை விரிப்புகள் - உங்கள் குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது, கீழே விழுந்தால் அடிபட்டு விடுவார்கள். எனவே அவர்கள் அறையில் மிருதுவான தரைவிரிப்புக்களைக் கொண்டு அலங்காரம் செய்யுங்கள். மிருதுவான தரை விரிப்புகள், அதில் பிரின்டட் வண்ணங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அவை கார்கள், யுனிகான்கள் அல்லது வேறு ஏதேனும் குழந்தைகளுக்கு பிடித்த பிரின்ட்கள் இருக்கலாம்.

(5 / 10)

ஆடும் நாற்காலி - உங்கள் வீட்டில் ஆடும் நாற்காலிகள் இருந்தால் நல்லது. இது உங்கள் குழந்தைகளின் அறைக்கு பொருத்தமான ஒரு அலங்கார பொருள் மட்டுமின்றி தேவையான பொருளும் ஆகும். குழந்தைகளுக்கு அதில் படுத்து உறங்கவைக்க எளிமையானதாக இருக்கும். அவர்களை அந்த நாற்காளியில் அமர்ந்து ஆட்டி உறங்கவைத்து அருகில் உள்ள பெட்டில் படுக்க வைக்க வசதியாக இருக்கும். எனவே ஒரு வசதியான ஆடும் நாற்காலியையும் வாங்கிக்கொள்ளலாம்.

(6 / 10)

கலை - உங்கள் குழந்தைகள் எப்போது வர்ணம் தீட்டுவதில் ஈடுபாடு கொண்டிருந்தால் நல்லது இல்லாவிட்டாலும், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், அவர்களுக்கு எண்ணற்ற கிரையான்களை வாங்கிக்கொடுங்கள். அவர்கள் வர்ணங்கள் தீட்டி மகிழட்டும். அதையே நீங்கள் ஃப்ரேம் போட்டு வீட்டில் மாட்டலாம். அது அழகாகவும் இருக்கும். இது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையைக் காட்டும்.

(7 / 10)

தொங்கும் ஆர்கனைசர்கள் - நீங்கள் உங்கள் பொருட்களை அழகாக அடுக்கிகொள்ள தொங்கும் ஆர்கனைசர்களை பயன்படுத்தலாம். அவை ஆன்லைனில் அதிகம் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி அறையில் ஏதேனும் ஒரு இடத்தில் தொங்கவிட்டுக்கொண்டு, உங்கள் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், சூக்கள் போன்றவற்றை வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது எளிதாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் உங்கள் வீடு குப்பையாவது தடுக்கப்படும்.

(8 / 10)

வளர்ச்சி சார்ட் - உங்கள் குழந்தையின் படுக்கைக்கு அருகே வளர்ச்சி சார்ட்டை மாட்விடுங்கள். அவர்கள் அவ்வப்போது அவர்களின் வளர்ச்சி அளவை கணக்கிட்டுக்கொள்வார்கள். இது அவர்களுக்கு ஒரு விளையாட்டு போலும் இருக்கும். சுவருக்கு அலங்காரமாகவும் இருக்கும். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை அடி வளர்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.

(9 / 10)

தலையணைகள் - குட்டி, குட்டி தலையனைகளாக எண்ணற்றவை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் குழந்தைகளின் பெட்டை அலங்கரிக்க உதவும். அதோடு, எண்ணற்ற் வண்ணங்களில் அவை இருப்பதால், உங்கள் குழந்தைகளின் அறையை கவர்ச்சிகரமாக வைக்கவும் உதவும்.

(10 / 10)

மற்ற கேலரிக்கள்