சனி கோபம் ஆகிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு கஷ்டம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கோபம் ஆகிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு கஷ்டம்

சனி கோபம் ஆகிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு கஷ்டம்

Feb 03, 2024 10:47 AM IST Suriyakumar Jayabalan
Feb 03, 2024 10:47 AM , IST

  • Saturn Transit: சனிபகவானால் பிரச்னைகளை அனுபவிக்க போகும் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். சனி பகவான் எப்போதும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். நவகிரகங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாக நகர்ந்து செய்யும் செயலுக்கு ஏற்ப பிரபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் இவர் அமர்ந்தால் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். 

(1 / 6)

கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கும் சனி பகவான், தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணித்து வருகின்றார் இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 2025 ஆம் ஆண்டு தான் தனது இடத்தை மாற்றப் போகிறார். 

(2 / 6)

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து செயல்பாடுகளும் மிகப்பெரிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் கொடுக்கும். அந்த வகையில் சனி பகவான் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாகத்தில் நுழைகின்றார். இவருடைய இந்த இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிரமங்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

கடக ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் நேர்மையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் சற்று மந்த சூழ்நிலை ஏற்படும்.

(4 / 6)

ரிஷப ராசி: இந்த காலகட்டத்தில் நீங்கள் பயணங்கள் செய்வது மிகவும் மோசமான சூழ்நிலையை உருவாக்கும் எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும் தொழிலில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(5 / 6)

துலாம் ராசி: சனிபகவானின் நட்சத்திர மாற்றம் உங்களுக்கு வேதனையை கொடுக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்