சனிபகவான் உங்களை விட மாட்டார்.. பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள்
- Saturn Transit: சனிபகவானால் பொற்காலத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Saturn Transit: சனிபகவானால் பொற்காலத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் மற்றும் தீமைகள் அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது, அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று சனிபகவான் உதயமாகின்றார். சனி பகவானின் உதயத்தால் ஒரு சில ராசிகள் பொற்காலத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: சனிபகவானின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். பண வரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
ரிஷப ராசி: சுக்கிரனின் ராசியாக விளங்கக்கூடிய உங்களுக்கு சனிபகவானின் உதயம் சிறப்பாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
மற்ற கேலரிக்கள்