தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs That Will Suffer Due To Lord Mercury

விரட்டி விரட்டி அடி உறுதி.. புதனிடம் சிக்கிய ராசிகள்

Feb 22, 2024 02:51 PM IST Suriyakumar Jayabalan
Feb 22, 2024 02:51 PM , IST

  • புதன் அஸ்தமனத்தால் கஷ்டப்பட போகும் ராசிகள் இங்கே காண்போம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, புத்தி கூர்மை, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் தற்போது சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 6)

இந்நிலையில் இதே ராசியில் கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி அன்று அஸ்தமனம் ஆனார். தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு இதே நிலையில் பயணம் செய்வார். புதன் பகவானின் அஸ்தமனம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். கூட்டு வணிகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு பணம் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும். 

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சில சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவுகளை எடுத்தாலும் யோசித்து எடுப்பது நல்லது. உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்