தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நாக்கில் நடனமாடும் ராகு.. அதிகமா பேசினா அடி விழும்.. சிக்கி சிதையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

நாக்கில் நடனமாடும் ராகு.. அதிகமா பேசினா அடி விழும்.. சிக்கி சிதையும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Jun 15, 2024 02:22 PM IST Suriyakumar Jayabalan
Jun 15, 2024 02:22 PM , IST

  • Lord Rahu: ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தினாலும் இந்த டிசம்பர் மாதம் வரை மூன்று ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். ராகு மற்றும் கேது இணை பிரியாத கிரகமாக விளங்கி வருகின்றனர். வெவ்வேறு ராசிகள் பயணம் செய்து வந்தாலும் இவர்களின் செயல்பாடுகள் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். 

(1 / 6)

ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் ராகு பகவானுக்கு சொந்த ராசி எதுவும் கிடையாது. 

(2 / 6)

ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தில் ஏற்படுத்தினாலும் இந்த டிசம்பர் மாதம் வரை மூன்று ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் ராகு பகவான் ஏழாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு டிசம்பர் மாதம் வரை கஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை உருவாகும் காதல் வாழ்க்கை சிக்கலாக இருக்கும்.

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணித்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வார்த்தைகளில் சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 6)

கும்ப ராசி: சனி பகவானின் சொந்தமான ராசியாக விளங்கக்கூடிய உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் டிசம்பர் மாதம் வரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகள் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் .

(6 / 6)

மற்ற கேலரிக்கள்