பணமழை கொட்டும் குரு.. யோகராசிகள் இவர்கள்தான்
- Guru Peyarchi: குருபகவான் சுப பலன்களை கொடுக்கப் போகும் ராசிகள் இங்கே காண்போம்.
- Guru Peyarchi: குருபகவான் சுப பலன்களை கொடுக்கப் போகும் ராசிகள் இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் குரு பகவான் மங்கல நாயகனாக விளங்கி வருகிறார். இவர் ஒரு அரசியல் சஞ்சாரம் செய்யும் ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.
(2 / 6)
குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும்போது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். குரு பகவான் ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(3 / 6)
அந்த வகையில் குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இந்த பயணமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுடைய பேச்சில் இனிமை அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். பொறுமையாக இருந்தால் அனைத்தும் உங்களை வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
(5 / 6)
மிதுன ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் நிறைவேறும். மனதில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதே சமயம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்