Tamil News  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Sign People Who Are Going To Be Troubled By Lord Rahu

அடி வெளுக்கப் போகும் ராகு.. 3 ராசிகளுக்கு எச்சரிக்கை

Jan 31, 2024 04:46 PM IST Suriyakumar Jayabalan
Jan 31, 2024 04:46 PM , IST

  • Rahu Transit: ராகு பகவானால் சிரமப்பட போகும் ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர்களின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். சுப மற்றும் அசுப பலன்கள் என அனைத்தும் கிரக நிலைக்கு ஏற்றவாறு கிடைக்கும். அந்த வகையில் கடந்த அக்டோபர் 30-ம் தேதியன்று ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். 

(1 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரக்கூடிய 2025 ஆம் ஆண்டு கும்ப ராசிக்கு ராகு பகவான் இடம் மாறுகிறார். மீன ராசிக்கு ராகு பகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் அந்த ராசிக்கு இந்த ஆண்டு சிறப்பான பலன்கள் எதுவும் இருக்காது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 6)

ராகு பகவானை பார்த்து எப்போதும் அச்சப்பட தேவையில்லை இருக்கும் இடத்தை கொண்டு சில சாதகமான பலன்களையும் அவர் கொடுப்பார். ஜாதகத்தில் ராகு பகவான் அசுப சூழ்நிலையில் இருந்தால் அவர்களுக்கு மோசமான பலன்கள் கிடைக்கும் சூழ்நிலை உண்டாகும். அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு ராகு பகவானால் சங்கடங்களை சந்திக்கப்போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

தனுசு ராசி: இந்த ஆண்டு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ராகு பகவான் உங்கள் வாழ்க்கையில் வசதிகளை கொடுத்து அதன் பின்னர் அதனை குறைப்பார் என கூறப்படுகிறது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

கும்ப ராசி: இந்த 2024 ஆம் ஆண்டு பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் ராகு பகவானால் சந்திக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அவ்வப்போது சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பயணம் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் உடம்புகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். 

(5 / 6)

கன்னி ராசி: ராகு பகவானின் தாக்கம் இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் உறவினர் மற்றும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரியத்தடைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்