சனியின் பிப்ரவரி சம்பவம் உறுதி.. பண வீட்டில் குடியேறப் போகும் ராசிகள்
- Saturn: சனிபகவானின் அஸ்தமனத்தால் உச்சம் செல்ல போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Saturn: சனிபகவானின் அஸ்தமனத்தால் உச்சம் செல்ல போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி அவ்வப்போது கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். அதற்கு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக் கொள்கிறார்கள். இந்த இடமாற்றத்தின் கால நேரமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார். 2025 வரை இதய ராசியில் இருப்பார்.
(2 / 6)
சனிபகவான் வரும் பிப்ரவரி 11ம் தேதி அன்று அஸ்தமனம் ஆகின்றார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்து அன்றைய தினம் உதயம் ஆகின்றார். இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் மிகப்பெரிய தாக்கம் இருக்கும்.
(3 / 6)
சனிபகவானின் அஸ்தமனம் காலமான 38 நாட்கள் ஒரு சில ராசிகள் பாதிப்புகளை பெற்றாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மிதுன ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கூடுதல் வருமானம் வருவதற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
(5 / 6)
கடக ராசி: சனிபகவான் உங்களுடைய ராசியில் எட்டாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். உங்களுக்கு அனைத்து விதமான சாதகமான சூழ்நிலைகளும் கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய திட்டம் முன்னேற்றம் அடையும்
(6 / 6)
சிம்ம ராசி: சனி பகவான் உங்களுடைய ராசியில் ஏழாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்