500 வருடங்களுக்குப் பிறகு உருவான பண யோகம்.. 3 ராசிகளுக்கு ராஜயோகம்
- Sun Transit: சூரியனால் உருவான ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- Sun Transit: சூரியனால் உருவான ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 6)
நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் சூரிய பகவானின் இடமாற்றம் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும்.
(2 / 6)
அதன் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சமீபத்தில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனியோடு சூரிய பகவான் இணைகின்றார்.
(3 / 6)
அது மட்டும் அல்லாமல் சூரிய பகவான் நுழைந்த பிறகு இரண்டு பக்கங்களும் ராகு மற்றும் செவ்வாய் 2 கிரகங்கள் அமைந்துள்ளன இதனால் உபயாச்சாரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது. 500 ஆண்டுகளுக்கு பிறகு இந்த யோகம் உருவாகியுள்ளதால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசி பலன் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மகர ராசி: சூரிய பகவானின் ராஜயோகத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டிலிருந்து பண ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
(5 / 6)
துலாம் ராசி: சூரியனின் ராஜயோகத்தால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
(6 / 6)
கும்பராசி: சூரிய பகவான் உங்களுக்கு மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுத்துள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிக ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
மற்ற கேலரிக்கள்