சனி நாளை அஸ்தமனம்.. முரட்டு அடி விழும் 3 ராசிகள்
- Saturn Transit: சனி அஸ்தமனத்தால் கஷ்டப்படப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- Saturn Transit: சனி அஸ்தமனத்தால் கஷ்டப்படப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். நவகிரகங்களுடன் ஒப்பிடுகையில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் இவருடைய இடமாற்றம் சில ராசிகளுக்கு வேதனையையும், சில ராசிகளுக்கு யோகத்தையும் கொடுக்கும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்கின்றார்.
(3 / 6)
இந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி அன்று அதாவது நாளை கும்ப ராசியில் சனி பகவான் அஸ்தமனம் ஆகின்றார். சில ராசிகளுக்கு இந்த இடமாற்றம் சாதகமாக அமைந்தாலும் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
தனுசு ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அஸ்தமனமாக போகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் அதிகரிக்க போகின்றது. வசதிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தன்னம்பிக்கையில் குறைவு ஏற்படக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் சிறு சிறு தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் சனிபகவான் ஐந்தாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளால் பெற்றோர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்