விட்டுக்கொடுக்காத சுக்கிரன் புதன்.. பண பல்லாக்கில் ஏறும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
- Venus and Mercury: ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று மிதுன ராசியில் புதன் பகவான் உதயமாகின்றார். அதற்குப் பிறகு ஜூன் 28ஆம் தேதி அன்று சுக்கிரன் உதயமாகின்றார். புதன் மற்றும் சுக்கிரன் இந்த இரண்டு கிரகங்களும் உதயமாகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.
- Venus and Mercury: ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று மிதுன ராசியில் புதன் பகவான் உதயமாகின்றார். அதற்குப் பிறகு ஜூன் 28ஆம் தேதி அன்று சுக்கிரன் உதயமாகின்றார். புதன் மற்றும் சுக்கிரன் இந்த இரண்டு கிரகங்களும் உதயமாகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய ஒரு சுக்கிரன். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல், உள்ளிட்டவைகளுக்கு காரணனாக விளங்கி வருகின்றார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன்.
(2 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ராசி மாற்றம் செய்யும்பொழுது அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.
(3 / 6)
புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தனர். ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று மிதுன ராசியில் புதன் பகவான் உதயமாகின்றார். அதற்குப் பிறகு ஜூன் 28ஆம் தேதி அன்று சுக்கிரன் உதயமாகின்றார். இந்த இரண்டு கிரகங்களும் உதயமாகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் அதிர்ஷ்டம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் புதன் சுக்கிரன் உதயமானது அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வருமானத்திற்கு ஏற்ப செலவு இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. புதிய முயற்சிகள் உங்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் .புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
(6 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் புதன் மற்றும் சித்திரன் உதயம் நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இந்த வேலையை செய்தாலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் ஆளுமை திறன் அதிகரிக்கும். கடன் சிக்கல்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மற்ற கேலரிக்கள்