தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கும்பத்தில் கோபம்.. உதயத்தில் முரட்டு அடி.. 4 ராசிகளுக்கு அடி உறுதி

சனி கும்பத்தில் கோபம்.. உதயத்தில் முரட்டு அடி.. 4 ராசிகளுக்கு அடி உறுதி

Mar 06, 2024 11:02 AM IST Suriyakumar Jayabalan
Mar 06, 2024 11:02 AM , IST

  • Transit of Saturn: சனிபகவானால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். கர்ம வினைகளை கணக்கெடுத்து அதற்கு ஏற்றார் போல் திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் கும்பம் மற்றும் மகர ராசியில் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 7)

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியில் பயணம் செய்கின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

அந்த வகையில் சனிபகவான் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று அஸ்தமனமானார். வரும் மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகின்றார். சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(3 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(4 / 7)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் நீங்கள் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. வீட்டில் மங்கள காரியங்கள் செய்ய நினைத்தால் அதனை தற்போது தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். 

(5 / 7)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி பகவான் உதயமாகின்றார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான தடைகளை சந்திக்க நேரிடும். வியாபாரம் மற்றும் தொழிலில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாக அதிக கவனம் செலுத்த வேண்டும். 

(6 / 7)

மீன ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சனிபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடும். பண சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடைய சிக்கல்கள் ஏற்படும். மன உளைச்சல் ஏற்படக்கூடும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்