சனி உதிக்காமல் விடமாட்டார்.. பணமழை கொட்ட போகும் ராசிகள்
- Saturn Transit: சனிபகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Saturn Transit: சனிபகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 8)
நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் எப்போதும் கர்ம பலன்களை திருப்பிக் கொடுப்பார்.
(2 / 8)
கடின உழைப்புக்கு நல்ல பலன்களை கொடுப்பதுதான் இவருடைய வேலை. சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு இடத்தை மாற்றுகிறார்.
(3 / 8)
சனி பகவான் நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 8)
அந்த வகையில் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயமாக உள்ளார். இது மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(5 / 8)
மேஷ ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(6 / 8)
ரிஷப ராசி: சனி பகவானால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(7 / 8)
சிம்ம ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய பரிசாக அமைந்துள்ளது. இந்த நாட்கள் உங்களுக்கு தடைபட்டு கிடந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். திருமண காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மற்ற கேலரிக்கள்