தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணக்கட்டிலில் மிதக்க விடும் குரு.. தலைகீழாக குதிக்கும் ராசிகள்.. மகிழ்ச்சியில் விளையாடப் போவது யார்?

பணக்கட்டிலில் மிதக்க விடும் குரு.. தலைகீழாக குதிக்கும் ராசிகள்.. மகிழ்ச்சியில் விளையாடப் போவது யார்?

Jun 13, 2024 10:11 AM IST Suriyakumar Jayabalan
Jun 13, 2024 10:11 AM , IST

  • Lord Guru: குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக இருந்தாலும் மே ஒன்றாம் தேதியும் இடமாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் அவர் ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆனார். அஸ்தமன நேரத்தில் அனைத்து கிரகங்களின் பலன்களும் சற்று மந்தமாக இருக்கும்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண யோகம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்த ஆண்டு பெரிதாக முக்கிய கிரகங்களின் இடமாற்றம் எதுவும் நடக்கவில்லை. குரு பகவான் மட்டுமே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இது விமர்சையாக அனைத்து குரு பகவான் கோயில்களிலும் கொண்டாடப்பட்டது. 

(2 / 6)

குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக இருந்தாலும் மே ஒன்றாம் தேதியும் இடமாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் அவர் ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆனார். அஸ்தமன நேரத்தில் அனைத்து கிரகங்களின் பலன்களும் சற்று மந்தமாக இருக்கும். ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாக உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் யோகத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். ஜூன் மாதத்தில் இருந்து வெற்றிகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் உதயம் ஆகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் சிறப்பாக முடிவடையும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். விரும்பிய இடத்திற்கு உங்களுக்கு வேலை மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்