Rahu Rasis: கதவை திற பணம் கொட்டும்.. ராட்சசனாக மாறும் ராகு.. இந்த ராசிகள் காட்டில் பண மழை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Rasis: கதவை திற பணம் கொட்டும்.. ராட்சசனாக மாறும் ராகு.. இந்த ராசிகள் காட்டில் பண மழை

Rahu Rasis: கதவை திற பணம் கொட்டும்.. ராட்சசனாக மாறும் ராகு.. இந்த ராசிகள் காட்டில் பண மழை

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 12, 2024 02:47 PM IST

Rahu Rasis: ராகு பகவான் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று சனிபகவானின் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இதனால் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

கதவை திற பணம் கொட்டும்.. ராட்சசனாக மாறும் ராகு.. இந்த ராசிகள் காட்டில் பண மழை
கதவை திற பணம் கொட்டும்.. ராட்சசனாக மாறும் ராகு.. இந்த ராசிகள் காட்டில் பண மழை

இது போன்ற போட்டோக்கள்

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தற்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ராகு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஜூலை எட்டாம் தேதி அன்று சனிபகவானின் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இதனால் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை பணத்தில் குளிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

ரிஷப ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். கவலையால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் அதிக பண வரவை ராகு பகவான் கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் தேவதை உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

விருச்சிக ராசி

ராகு பகவான் உங்களுக்கு திடீர் பணவரவை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அவருடைய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் விரைவாக முடிவடையும். நிலுவையில் உள்ள காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டால் உங்களுக்கு வேறு எந்த சிக்கல்களும் ஏற்படாது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தினரிடம் உங்களுக்கு இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9