Lord Shani: சுழற்றி சுழற்றி பிரித்து மேயும் ஏழரை சனி.. சிக்கி சிதையும் ராசிகள்.. கண்ணீரில் கதற போவது நீங்கள்தானா!
- Lord Shani: சனி பகவானின் வக்கிரபயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கலை கொடுப்பது உறுதி ஆகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Shani: சனி பகவானின் வக்கிரபயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கலை கொடுப்பது உறுதி ஆகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் சனி பகவான் ஜூன் 29ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைந்தார். நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி பகவானின் வக்கிரபயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கலை கொடுப்பது உறுதி ஆகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும். கடின உழைப்பு கொடுத்தாலும் வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும்.
(5 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். வேலைகளில் பல்வேறு விதமான தடைகளில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் கொஞ்சம் கடினமான உழைப்பை கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் இருக்காது. தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்
(6 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி வக்கிரம் அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நவம்பர் மாதம் வரை நீங்கள் கடின உழைப்பை கொடுப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மற்ற கேலரிக்கள்