தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Rasis Associated With Lord Mercury

விரட்டி விரட்டி அடி விழப்போகும் ராசிகள்.. புதன் அஸ்தமனம் ஆகிறார்

Mar 01, 2024 02:59 PM IST Suriyakumar Jayabalan
Mar 01, 2024 02:59 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் இளவரசன் பட்டத்தோடு இருக்கக்கூடியவர் புதன் பகவான். இவர் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் புத்திசாலித்தனம், அறிவு, பேச்சு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

(1 / 6)

புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சனி பகவானின் மகர ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த பிப்ரவரி எட்டாம் தேதி அன்று மகர ராசியில் அஸ்தமனமானார். ஒரு மாத காலம் இதே ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்கின்றார். 

(2 / 6)

புதன் பகவான் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடத்தில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டு வணிக முறை தற்போது சரியாக இருக்காது. 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாகின்றார். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்