தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Lord Mars Gets The Rising Horoscope

உதிக்கும் செவ்வாய்.. பணத்தில் குதிக்கும் ராசிகள்

Jan 26, 2024 06:00 AM IST Suriyakumar Jayabalan
Jan 26, 2024 06:00 AM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவான் உதயம் கொடுக்கும் யோசத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(1 / 7)

நவகிரகங்களின் இடமாற்றத்தை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவானும் தன்னுடைய இடத்தை மாற்றுவதற்கு குறுகிய காலம் எடுத்துக் கொள்கிறார் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

(2 / 7)

தற்போது தனுசு ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகிறார். தனுசு ராசியில் உதயமாகி பிப்ரவரி மாதம் வரை தனது பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த செயல்பாடு 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர்  அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதயமாகி உள்ள காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(5 / 7)

மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் உதயமாகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செவ்வாய் உதித்துள்ளார். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலைக்கு மாறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் வாங்கும் சூழ்நிலை இத்தோடு முடிவடையும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்