500 வருடங்களுக்குப் பிறகு உருவான ராஜயோகம்.. சூரியன் கொட்டும் பணமழை-here we will find the zodiac signs that are going to fully enjoy the rajayoga of lord surya - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  500 வருடங்களுக்குப் பிறகு உருவான ராஜயோகம்.. சூரியன் கொட்டும் பணமழை

500 வருடங்களுக்குப் பிறகு உருவான ராஜயோகம்.. சூரியன் கொட்டும் பணமழை

Feb 26, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Feb 26, 2024 06:30 AM , IST

  • Surya Peyarchi: சூரிய பகவானின் ராஜயோகத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். சூரிய பகவான் இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

சூரிய பகவானின் இடமாற்றத்தின் போது தமிழ் மாதம் பிறக்கின்றது. கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று மகர ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். இந்த திருநாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.

(2 / 7)

இவருடைய ஒவ்வொரு இடமாற்றத்தின் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்ற காரணத்தினால் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போது சூரிய பகவான் சனிபகவானின் கும்ப ராசியில் புகுந்துள்ளார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் இது அவருடைய சொந்த ராசியாகும். இதனால் சூரியன் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 

(3 / 7)

அதே சமயம் ராகு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இரண்டு கிரகங்களும் சூரியனுக்கு இரண்டு புறமும் அமைந்துள்ளனர். இதனால் உபயாச்சாரி ராஜயோகம் உருவாகியுள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள இந்த ராஜ யோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மகர ராசி: சூரிய பகவான் ராஜயோகம் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான சூழ்நிலை அமையும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

(5 / 7)

துலாம் ராசி: சூரிய பகவானின் ராஜயோகம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(6 / 7)

கும்ப ராசி: சூரிய பகவான் ராஜயோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிக ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்