குருவை பாய்ந்து கட்டி அணைத்த செவ்வாய்.. கொட்டும் பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டக்காரர் யார்?
- Guru Mars: செவ்வாய் பகவான் தற்போது ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். இதன் காரணமாக செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.
- Guru Mars: செவ்வாய் பகவான் தற்போது ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். இதன் காரணமாக செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.
(1 / 6)
நவ கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் அமர்ந்தால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார்.
(2 / 6)
நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வரக்கூடியவர். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை இவர் மாற்றுவார். இவர் ஒரு இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.
(3 / 6)
செவ்வாய் பகவான் தற்போது ஜூன் மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். இதன் காரணமாக செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கி கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். அரசு வேலைகள் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் இவர்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தில் பெரிய அளவில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்