குரு பணமழை.. ரிஷபத்தில் நுழைகிறார்.. மே மாதம் ஜாக்பாட்.. குபேரனாக மாறப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்
- Guru Transit: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். குரு பகவானின் பார்வை பட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். தற்போது வரும் மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் இடம் மாறுகின்றார்.
- Guru Transit: குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். குரு பகவானின் பார்வை பட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். தற்போது வரும் மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் இடம் மாறுகின்றார்.
(1 / 7)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார் என கூறப்படுகிறது. குருபகவான் தேவர்களின் ராஜ குருவாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 7)
தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஒரு குரு பகவானின் பார்வை பட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். தற்போது வரும் மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் இடம் மாறுகின்றார்.
(3 / 7)
குருபகவான் ரிஷப ராசியில் இடம் மாறுகின்ற அதே சமயம் மிருகஷீரிடம், ரோகிணி, கார்த்திகை உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்யப் போகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாக்குறுதியை காப்பாற்றுவதில் முழுமையாக ஈடுபடுவீர்கள். உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
(5 / 7)
மிதுன ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. விபரீத ராஜயோகம் உங்களுக்கு உருவாகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் தொல்லைகளில் இருந்து முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(6 / 7)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் குரு பகவான் பயணம் செய்யப்போகின்ற காரணத்தினால் உங்களுக்கு பலன்கள் அதிகம் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
(7 / 7)
கடக ராசி: மே மாதம் குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வாழ்க்கையில் புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். ஒரு வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
மற்ற கேலரிக்கள்