Lord Surya: சூரிய பகவானின் ரிஷப ராசி பயணம்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. யாருக்கு லாபம் தெரியுமா?
- Lord Surya: ரிஷப ராசியில் நுழைந்த போது வைகாசி மாதம் பிறந்தது. சூரிய பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது.
- Lord Surya: ரிஷப ராசியில் நுழைந்த போது வைகாசி மாதம் பிறந்தது. சூரிய பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது.
(1 / 7)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் அதிபர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாதத்திற்கு ஒருமுறை தனது விதத்தை மாற்றினாலும் சூரிய பகவான் ஒவ்வொரு முறை இடமாறும் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 7)
நவக்கிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்டவராக சூரிய பகவான் விளங்கி வருகின்றார் சூரிய பகவான். ஒரு ராசியில் உச்சமாக இருந்தால் அவர்களுக்கு புகழ் மற்றும் வெற்றி உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.
(3 / 7)
ரிஷப ராசியில் நுழைந்த போது வைகாசி மாதம் பிறந்தது. சூரிய பகவானின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். மேஷ ராசி உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார்.
(4 / 7)
இதனால் உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். இந்த ஒரு மாத வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
(5 / 7)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டு தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். எடுத்துக் கொண்ட இலக்குகளில் முன்னேற்றம் கிடைக்கும்.
(6 / 7)
கடக ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(7 / 7)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது பெட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்க்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நல்ல அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். நீண்டகால கனவுகள் நிறைவேறும்.
மற்ற கேலரிக்கள்