30 வருடங்களுக்குப் பின் சனி கொட்டும் பணமழை.. மார்ச் ஆரம்பம்.. 3 ராசிகளுக்கு யோகம்
- Saturn Transit: சனிபகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Saturn Transit: சனிபகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பகுப்பாய்ந்து பாரபட்சம் இல்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு இடம் மாறுகிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் மார்ச் மாதத்தில் உதயமாகின்றார்.
(4 / 6)
மேஷ ராசி: சனிபகவான் உங்கள் ராசிகள் 11வது வீட்டில் உதயமாகின்றார். இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிலத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் சனிபகவான் ஒன்பதாவது வீட்டில் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். அனைத்து சிக்கல்களும் நீங்க மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் விரும்பிய இடம் உங்களுக்கு கிடைக்கும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சனி பகவான் உதயம் ஆகின்றார். மார்ச் மாதம் முதல் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரம் விரிவு படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நல்ல முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.
மற்ற கேலரிக்கள்