பாவப் புத்தகத்தை புரட்டும் புதன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்
- Transit of Mercury: புதன் பகவானால் சிரமப்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Transit of Mercury: புதன் பகவானால் சிரமப்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் அறிவு, கல்வி, பேச்சு, பகுத்தறிவு, நரம்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
(2 / 6)
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது புதன் பகவான் சனி பகவான் ராசியான மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் புதன் பகவான் அஸ்தமனமானார். ஒரு மாத காலம் இந்த அஸ்தமன நிலையில் புதன் பகவான் பயணம் செய்வார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரியத்தில் தடைகள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் வரும். மற்றவர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் நஷ்டம் பணமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரிய முதலீடுகளை தற்போது செய்வதில் தாமதம் காட்டினால் நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடு வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்