தமிழ் செய்திகள்  /  Photos  /  Here We Will Find The Zodiac Signs That Are Completely Blessed By Lord Saturn

Saturn: சனி அஸ்தமனம் ஆகிறார்.. இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 03, 2024 05:43 PM IST

சனி பகவானால் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவான் வரும் பிப்ரவரி 11ம் தேதி அன்று அஸ்தமனம் ஆகின்றார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்து அன்றைய தினம் உதயம் ஆகின்றார். இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் மிகப்பெரிய தாக்கம் இருக்கும்.

சனிபகவானின் அஸ்தமனம் காலமான 38 நாட்கள் ஒரு சில ராசிகள் பாதிப்புகளை பெற்றாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். கூடுதல் வருமானம் வருவதற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

கடக ராசி

 

சனிபகவான் உங்களுடைய ராசியில் எட்டாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். உங்களுக்கு அனைத்து விதமான சாதகமான சூழ்நிலைகளும் கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய திட்டம் முன்னேற்றம் அடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

சனி பகவான் உங்களுடைய ராசியில் ஏழாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முழுமையான திருப்தி கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel