புதனின் சுக்கிர யோகம்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்
- புதன் பகவானால் சுக்கிர யோகத்தை பெற்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.
- புதன் பகவானால் சுக்கிர யோகத்தை பெற்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் வழங்கி வருகிறார். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, அறிவு, கல்வி, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது இடம் மாறுவார்கள் அதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும்.
(2 / 6)
அந்த வகையில் புதன் பகவான் நவகிரகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். ஒருவருடைய ராசிகள் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு கல்வி மற்றும் அறிவு உள்ளிட்ட விஷயங்களில் மிகுந்த பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(3 / 6)
புதன் பகவான் தற்போது நிவர்த்தி அடைந்த நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஜனவரி 2ஆம் தேதி அன்று நேரான பயணத்தை தொடங்கிய புதன் பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். கூட்டுத் தொழில் வெற்றி அடையும் தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
(5 / 6)
துலாம் ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கி பயணித்து வருகிறார். உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
மற்ற கேலரிக்கள்