Lord Guru: கொட்டோ கொட்டுன்னு கொட்டும் குரு.. பணத்தில் மூழ்கி மூச்சுத் திணரும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருது
- Lord Guru: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
- Lord Guru: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ள தேவைகளுக்கு காரண கர்த்தாவாக விளங்கி வருகிறார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
(2 / 6)
குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்திற்கு இடம் மாறினார்.
(3 / 6)
குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(4 / 6)
கடக ராசி: குரு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்கப் போகின்றது. செல்வத்தில் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: குரு நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(6 / 6)
மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பல்வேறு வலிகளில் இருந்து உங்களுக்கு பணம் வரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மற்ற கேலரிக்கள்