தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கொட்டும் பொற்காசுகள்.. அப்படியே வாரிக் கொள்ளப் போகும் ராசிகள்

குரு கொட்டும் பொற்காசுகள்.. அப்படியே வாரிக் கொள்ளப் போகும் ராசிகள்

Jan 26, 2024 10:58 AM IST Suriyakumar Jayabalan
Jan 26, 2024 10:58 AM , IST

  • Guru Bhagavan: குருபகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குரு பகவான். நவகிரகங்களில் மங்களநாயகனாக இவர் விளங்கி வருகிறார். எப்போதும் சுப பலன்களை கொடுக்கும் குரு பகவான் அவ்வப்போது சில சிக்கல்களை கொடுப்பார். அது அவருடைய இடமாற்றத்தை பொறுத்து அமைகின்றது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்து வருகிறார். 

(1 / 8)

நவக்கிரகங்களும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.  

(2 / 8)

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். நேரான பயணத்தை மேற்கொண்டு வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார். மே 6ஆம் தேதி அன்று அஸ்தமனம் ஆகிறார். அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். 

(3 / 8)

வரும் மே மாதம் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நுழைகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிக சுப பலன்களை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(4 / 8)

மேஷ ராசி: இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஆடம்பர பொருட்கள் வாங்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க கூடும்.

(5 / 8)

கடக ராசி: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

(6 / 8)

சிம்ம ராசி: குருபகவானின் சுப பலன்களை நீங்கள் பெறப் போகின்றீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைய உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(7 / 8)

கன்னி ராசி: குருபகவானின் அதிர்ஷ்டத்தை நீங்கள் முழுமையாக பெற போகின்றீர்கள். இந்த காலகட்டம் உங்களுக்கு சுகமாக அமைய உள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. விருப்பங்கள் நிறைவேற கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(8 / 8)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்