Lord Sani 2024: சனி கண்கள் திறந்தது.. வக்கிரப் பெயர்ச்சியில் வாய்ப்பு.. பணத்தில் மூழ்கும் ராசிகள் இவர்கள்தான்
- Lord Sani: சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் முழு யோகத்தை பெற்றுள்ளனர்.
- Lord Sani: சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் முழு யோகத்தை பெற்றுள்ளனர்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சிவபெருமானின் பெருமைக்குரிய ஈஸ்வரன் பட்டத்தை பெற்றவர் சனீஸ்வர பகவான்.
(2 / 6)
சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். தற்போது சனி பகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் முழு யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: சனிபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் உங்களுக்கு அபரிமிதமான செல்வத்தை கொடுக்கப் போகின்றது. பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் அற்புதமான பலன்களை சனி வக்கிர பெயர்ச்சி நிகழ்த்தப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
(6 / 6)
சிம்ம ராசி: சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பல நல்ல செய்திகளை தேடி வந்து கொடுக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து சுமூகமான சூழ்நிலை அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் குறையும்.
மற்ற கேலரிக்கள்