Rahu: விடாமல் துரத்தும் ராகு கேது.. யாருக்கு லாபம்?
- Rahu Ketu Transit: ராகு கேதுவால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
- Rahu Ketu Transit: ராகு கேதுவால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் வழங்கி வருகின்றனர். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
(2 / 6)
நவகிரகங்களில் ராகு கேதுவின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ராகு கேது கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள். இவர்களுடைய இடமாற்றம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
(3 / 6)
ராகு பகவான் தற்போது மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இந்த புத்தாண்டு முதல் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இதுவரை திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவடையும். நிம்மதி பெருமூச்சு விடுகின்ற சூழ்நிலை அமையும். திருமணத்தில் ஏற்பட்டு வந்த தாமதம் குறையும். கட்டாயம் திருமண தடை நீங்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
ரிஷப ராசி: பொங்கல் முதல் உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாக்கும். சில யோகம் கிடைக்கும் போது நீங்கள் வெளிநாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
மிதுன ராசி:காதல் வாழ்க்கையில் உங்களுக்கு இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். மாணவர்கள் சற்று படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். தொழில்நுட்பத் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்