சனி கொடுத்தால் எவர் தடுப்பர்.. 3 ராசிகளுக்கு கொட்டப் போகும் பணமழை
- Saturn Transit: சனிபகவான் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
- Saturn Transit: சனிபகவான் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.
(2 / 7)
சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள்.
(3 / 7)
அந்த வகையில் சனிபகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்வார்.
(4 / 7)
தற்போது இதே கும்ப ராசியில் சனி பகவான் இந்த மார்ச் மாதம் உதயமாகின்றார். சனிபகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்
(5 / 7)
மேஷ ராசி: உங்கள் ராசியில் சனி பகவான் 11ஆவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
(6 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் உதயம் ஆகின்றார். அதனால் உங்களுக்கு வாழ்வில் பல்வேறு விதமான மகிழ்ச்சிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
(7 / 7)
சிம்ம ராசி: சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களது ராசியில் ஏழாவது வீட்டில் உதயமாகின்றார். மார்ச் மாதம் முழுவதும் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். வியாபாரம் விரிவாகும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்