சுக்ராதித்திய யோகத்தில் குளிக்கப் போகும் ராசிகள்.. 18 மாதங்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து 3 கிரகங்கள்..!
- Shukraditya Yoga: சூரியன், குரு, சுக்கிரன் இவர்கள் மூவரும் இணைகின்ற காரணத்தினால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
- Shukraditya Yoga: சூரியன், குரு, சுக்கிரன் இவர்கள் மூவரும் இணைகின்ற காரணத்தினால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும்பொழுது அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். நவகிரகங்கள் இருக்கும். இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் இடமாறும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் யோகங்கள் பல்வேறு விதமான தாக்கங்களை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.
(2 / 6)
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஏப்ரல் 13ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது சூரிய பகவான் இணைந்துள்ளார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுத்திர பகவான் மேஷ ராசிக்குள் வருகிறார்.
(3 / 6)
இதனால் சூரியன் குரு சுக்கிரன் இவர்கள் மூவரும் இணைகின்ற காரணத்தினால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிர அதித்திய யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிர அதித்திய யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் சுக்கிர அதித்திய யோகம் முதல் வீட்டில் உருவாக்கியது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
மற்ற கேலரிக்கள்