கேது பறந்து வருகிறார்.. பண மழையில் நனையும் ராசிகள்
- Ketu Transit: கேது பகவானால் அதிர்ஷ்டத்தில் பெறப்போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.
- Ketu Transit: கேது பகவானால் அதிர்ஷ்டத்தில் பெறப்போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார். தனது துணையான ராகு பகவானோடு சேர்ந்து இருப்பார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 6)
அந்த வகையில் கேது பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். கேது பகவான் என்ற ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் கேது பகவான் கடந்த மார்ச் 4ஆம் தேதி அன்று சந்திர பகவானின் நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் நவம்பர் 10ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் கேது பகவான் இருக்கின்றார். உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்