Sukra Money Luck: சுயம்பு ராசிகள்.. சுக்கிரனின் சூறாவளி பணமழை.. அதிர்ஷ்டத்தில் நுழைய போகும் ராசிகள் நீங்கதான்
- Lord Venus: சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை மேஷ ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு அவருடைய சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார்.
- Lord Venus: சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை மேஷ ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு அவருடைய சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார்.
(1 / 6)
நவகிரகங்களின் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல், மகிழ்ச்சி, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றக்கூடியவர் சுக்கிரன். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை மேஷ ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு அவருடைய சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். சுக்கிர பகவான் ரிஷப ராசி பயனுமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மகிழ்ச்சியான சூழ்நிலைகளை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(3 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார் இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிறைய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நல்ல செய்தி உங்களை தேடி வரும் நண்பர்களால் உதவி கிடைக்கும்
(4 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் நல்ல வெற்றியை காண்பார்கள். திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் கௌரவம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். துணிச்சல் அதிகரிக்கப்படும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு நல்ல பாராட்டுகளை பெற்று தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்