தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here Are The Full Details About Which Foods Take How Long To Digest

Digest Tips: எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் சொிமானமாகும் தொியுமா? - முழு விபரம் இதோ..!

Jan 16, 2024 01:35 PM IST Karthikeyan S
Jan 16, 2024 01:35 PM , IST

  • நாம் சாப்பிடும் உணவு செரிமானம் அடைய எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறது என்பதை உணர்ந்து சாப்பிட்டால் நல்லது.

பொதுவாக நாம் சாப்பிடக்கூடிய உணவு செரிமானம் ஆவதற்கு எவ்வளவு நேரம் எடுத்து கொள்ளும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

(1 / 7)

தக்காளி, முள்ளங்கி, குடை மிளகாய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் கொண்டவைகள் செரிமானம் அடைய 30-40 நிமிடங்கள் ஆகும். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள்  ஆகும். 

(2 / 7)

காய்கறிகளை காட்டிலும் கிழங்கு வகைகளின் செரிமான நேரம் மாறுபடும். உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும். 

(3 / 7)

முட்டையின் மஞ்சள் கரு மட்டும் சொிமானம் அடைய 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.

(4 / 7)

பாலில் புரதம், கால்சியம், கொழுப்பு, வைட்டமின்கள் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக் கட்டிகள் செரிமானம் ஆவதற்கு  சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக் கட்டிகள் செரிமானம் ஆவதற்கு 5 மணி நேரம் கூட ஆகலாம். 

(5 / 7)

கோதுமை, பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் 90 நிமிடங்கள் வரை ஆகலாம். அதேபோல் பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும். 

(6 / 7)

கோழி, ஆடு, மாடு,  போன்ற இறைச்சி உணவுகள் செரிமானம் ஆவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரம் கூட எடுத்துக்கொள்ளும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்