மக்களே எச்சரிக்கை.. தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மக்களே எச்சரிக்கை.. தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்!

மக்களே எச்சரிக்கை.. தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்!

Published Dec 14, 2024 02:32 PM IST Divya Sekar
Published Dec 14, 2024 02:32 PM IST

  • தமிழகத்தில் இன்று தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CTA icon
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 

(1 / 6)

இது மேலும் வலுப்பெற்று மேற்கு- வடமேற்கு திசையில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். நேற்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக் கூடும்.

(2 / 6)

(Lakshmi)

14-12-2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

(3 / 6)

(AP)

தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

(4 / 6)

15-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

(5 / 6)

16-12-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

(6 / 6)

(PTI)

மற்ற கேலரிக்கள்