Weather Update: மக்களே உஷார்..இந்த 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் - ஆரஞ்சு எச்சரிக்கை!
- தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மழை நிலவரம் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
- தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மழை நிலவரம் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 6)
மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(2 / 6)
திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(3 / 6)
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று (ஜூன் 26) மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
(4 / 6)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
(5 / 6)
மீனவர்கள் இன்று மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 42 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மற்ற கேலரிக்கள்