Sunflower Seeds Benefits: பெண்கள், குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவாக இருக்கும் சூரியகாந்தி விதை! ஏன் தெரியுமா?
- Sunflower seeds: சூரியகாந்தி எண்ணெய் போல் சூரியகாந்தி விதைகளும் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதில் ஏராளமான ஊட்டசத்துகள், கொழுப்பு, நார்ச்சத்து நிறைந்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு சூரியகாந்தி விதையால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
- Sunflower seeds: சூரியகாந்தி எண்ணெய் போல் சூரியகாந்தி விதைகளும் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதில் ஏராளமான ஊட்டசத்துகள், கொழுப்பு, நார்ச்சத்து நிறைந்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு சூரியகாந்தி விதையால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
(1 / 8)
சூரியகாந்தி விதைகளில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உடலுக்கு துத்தநாகம் சத்தை தருகிறது. இவை உடலில் ஏற்படும் வைரஸுக்கு எதிராக போராடுகிறது
(2 / 8)
சூரியகாந்தி விதை இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இருதய நோய் பாதிப்பின் ஆபத்தை குறைக்கிறது
(3 / 8)
அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்ட இந்த விதைகள், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, நாள்பட்ட நோய் பாதிப்புகளின் ஆபத்தை குறைக்கிறது
(4 / 8)
புரதம், நார்ச்சத்து நிறைந்த இந்த விதைகள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் எடை குறைப்புக்கு உதவும். வயிறு நிரம்பிய உணர்வை தருவதோடு, குடல் இயக்கத்தை சீராக்குகிறது
(5 / 8)
சருமத்தில் உள்ள கொலஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ, இள வயதில் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது. அதேபோல் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது
(6 / 8)
செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து நிரம்பி இருப்பதால் வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
(7 / 8)
குழந்தைகள், பெண்கள் கட்டாயம் சாப்பிடக்கூடிய உணவாக சூரியகாந்தி விதைகள் இருக்கின்றன. இதில் நிரம்பியிருக்கும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புப்புரை அபாயத்தை குறைக்கிறது
மற்ற கேலரிக்கள்