நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு.. இதய ஆரோக்கியம் முதல் சுவாச பிரச்னை வரை.. பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு.. இதய ஆரோக்கியம் முதல் சுவாச பிரச்னை வரை.. பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு.. இதய ஆரோக்கியம் முதல் சுவாச பிரச்னை வரை.. பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Jan 04, 2025 06:57 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 04, 2025 06:57 AM , IST

  • இந்திய சமையலறையில் தவறாமல் இடம்பெறும் உணவு பொருளாக பூண்டு உள்ளது. இது சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் பல்வேறு வகைகளில் நன்மை விளைவிக்கிறது. குளிர்காலத்தில் அதிக அளவில் பூண்டு சாப்பிட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதில் உள்ள சத்துக்கள் குளிர்காலத்துக்கு மிகவும் அவசியம்.

பூண்டு பொதுவாக அனைத்து வகையான சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்திலும் இதற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. பூண்டு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக குளிர்காலத்தில்அதிக அளவில் ஏன் பூண்டு சாப்பிட வேண்டும் என்பதன் காரணத்தை தெரிந்து கொள்ளலாம்

(1 / 7)

குளிர்காலத்தில் வரும் நோய்களில் இருந்து விலகி இருக்க வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது மிகவும் அவசியம். இதற்கு பூண்டு பயனுள்ளதாக இருக்கும். பூண்டு இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்

(2 / 7)

பூண்டு சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள அல்லிசின், ரத்த அழுதத்தை கட்டுப்படுத்தி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. குளிர்காலத்தில் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது

(3 / 7)

பூண்டு நுரையீரல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது. இதில் உள்ள சத்துக்கள் நுரையீரல் தொற்றுகளை எதிர்த்துப் போராடுகின்றன. எனவே குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச பிரச்னையில் இருந்து விடுபட உதவுகிறது

(4 / 7)

பூண்டு நுரையீரல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது. இதில் உள்ள சத்துக்கள் நுரையீரல் தொற்றுகளை எதிர்த்துப் போராடுகின்றன. எனவே குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச பிரச்னையில் இருந்து விடுபட உதவுகிறது(Pixabay)

குளிர்காலத்தில் செரிமான பிரச்னையால் மலச்சிக்கல் ஏற்படு இயல்பான விஷயம். பூண்டு சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது 

(5 / 7)

வைட்டமின்கள் சி மற்றும் பி6, மாங்கனீஸ் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பூண்டில் உள்ளது. நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவது, வளர் சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துவது மற்றும் ஆக்ஸிஜனேற்ற சக்தி உட்பட பல்வேறு உடல் செயல்பாடுகளில் இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குளிர்கால சமையல் குறிப்புகளில் பூண்டைச் சேர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது

(6 / 7)

பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதற்காக, அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் செரிமான கோளாறு, வாய் துர்நாற்றம் மற்றும் சில சமயங்களில் அலர்ஜி போன்றவை ஏற்படும். எனவே, அதிகமாக சாப்பிடும் முன் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்

(7 / 7)

மற்ற கேலரிக்கள்