Health Tips: பிரிட்ஜில் எந்த உணவுகளை எவ்வளவு நேரம் வைக்கலாம்.. தவறியும் நீண்ட நேரம் வைக்க கூடாத உணவு பொருள்கள் இவைதான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Health Tips: பிரிட்ஜில் எந்த உணவுகளை எவ்வளவு நேரம் வைக்கலாம்.. தவறியும் நீண்ட நேரம் வைக்க கூடாத உணவு பொருள்கள் இவைதான்

Health Tips: பிரிட்ஜில் எந்த உணவுகளை எவ்வளவு நேரம் வைக்கலாம்.. தவறியும் நீண்ட நேரம் வைக்க கூடாத உணவு பொருள்கள் இவைதான்

Jan 17, 2025 02:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 17, 2025 02:45 PM , IST

Health Tips: இந்த உணவுகளை நீண்ட நேரம் பிரிட்ஜில் சேமித்து வைப்பது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். எந்த உணவையும் ப்ரஷ் ஆக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பெறலாம். இருப்பினும் உணவும் அதிகமாக மிஞ்சினால், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், உணவை பிரிட்ஜில் வைக்கிறோம்

குளிர்காலமாக இருந்தாலும் சரி, கோடைகாலமாக இருந்தாலும் சரி, வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு இன்றியமையாத விஷயமாக உள்ளது. பிரிட்ஜில் வைக்கப்படும் உணவு பொருள்கள், அதை நீண்ட நேரம் புதிதாக வைத்திருக்க உதவுகிறது. சமைத்த உணவுகள் மீதம் இருந்தால் பிரிட்ஜில் சேமிக்கப்படுகிறது. பிரிட்ஜில் சில உணவுகளை நீண்ட நேரம் உணவை சேமித்து வைத்தால் ஆரோக்கியத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்

(1 / 7)

(Shutterstock)

இட்லி, தோசைக்கு அரைக்கப்படும் மாவு பிரிட்ஜில் பல மணி நேரம் சேமித்து வைக்கு பழக்கம் பலருக்கும் உள்ளது. நீண்ட நேரம் பிரிட்ஜில் வைத்திருக்கும் மாவு ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக, மாவு காலையில் தயாரித்து மாலை வரை பிரிட்ஜில் வைக்கலாம். 2-3 நாள்களுக்கு பிறகு மாவு பிரிட்ஜில் வைத்து அதை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மாவில் வளர தொடங்கும். இது மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்றவை வயிற்று பிரச்னைகளை ஏற்படுத்தும்

(2 / 7)

(Pixabay)

அரிசி சாப்பாட்டை நீண்ட நேரம் பிரிட்ஜில் வைக்கக்கூடாது.  இதனால் அதில் பாக்டீரியாக்கள் வளரத் தொடங்குகின்றன. இது வயிற்று பிரச்னைகளை ஏற்படுத்தும். அரிசியை அதிகபட்சமாக ஒரு நாள் வரை பிரிட்ஜில் சேமிக்கலாம்

(3 / 7)

சமைத்த எந்த காய்கறிகளையும் பிரிட்ஜில் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை மட்டுமே சேமிக்க வேண்டும். சமைத்த காய்கறிகளை நீண்ட நேரம் வைக்கக்கூடாது. காய்கறிகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், அதன் சுவை மோசமடைந்து ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்

(4 / 7)

சமைத்த பருப்பை இரண்டு நாட்களுக்கு மேல் பிரிட்ஜில் வைக்க கூடாது. நீங்கள் அவற்றை நீண்ட நேரம் பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால், உங்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம். சமைத்த பருப்பில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் அழிந்துவிடும். இந்த பருப்பு வகைகளை சாப்பிடுவதால் அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்

(5 / 7)

(Pinterest )

சமைத்த உணவை பிரிட்ஜில் வைப்பதற்கு முன் அவை சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் அழுக்கு பிரிட்ஜில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை விரைவாக கெடுக்கும். ஒரே நேரத்தில் அதிக உணவை பிரிட்ஜில் சேமிக்க வேண்டாம்

(6 / 7)

குறிப்பு: இந்தத் தகவல் நிபுணர்களின் கருத்துகள், பொது அறிவு மற்றும் இணையத்தில் காணப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தத் தகவல் முற்றிலும் துல்லியமானது என்று கூறவில்லை. இந்த விஷயத்தில் துல்லியமான தகவலுக்கு, தொடர்புடைய துறையில் நிபுணர்களை அணுகவும்

(7 / 7)

மற்ற கேலரிக்கள்