அளவுக்கு மீறினால் நஞ்சாகும் உணவு.. குளிர்காலத்தில் இஞ்சி அதிகமாக சாப்பிட்டால் வரும் பக்க விளைவுகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அளவுக்கு மீறினால் நஞ்சாகும் உணவு.. குளிர்காலத்தில் இஞ்சி அதிகமாக சாப்பிட்டால் வரும் பக்க விளைவுகள்

அளவுக்கு மீறினால் நஞ்சாகும் உணவு.. குளிர்காலத்தில் இஞ்சி அதிகமாக சாப்பிட்டால் வரும் பக்க விளைவுகள்

Dec 21, 2024 01:34 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 21, 2024 01:34 PM , IST

Side Effects Of Eating Excessive Ginger: இஞ்சியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், குளிர் காலமாக இருந்தாலும், கோடை காலமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும். அளவுக்கு அதிகமாக இஞ்சி எடுத்துக்கொண்டால் வரும் பக்க விளைவுகள் என்ன என்பதை பார்க்கலாம்

உணவுகளின் சுவையை அதிகரிப்பது முதல் தேநீர் சுவையை மெருகேற்றுவது வரை இஞ்சி பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சிக்கு உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு பலரும் குளிர்காலத்தில் உடலை உஷ்ணத்துடன் வைக்க இஞ்சியை பல வகைகளில் அதிகமாக பயன்படுத்துவதுண்டு. அளவுக்கு அதிகமாக இஞ்சியை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்

(1 / 7)

உணவுகளின் சுவையை அதிகரிப்பது முதல் தேநீர் சுவையை மெருகேற்றுவது வரை இஞ்சி பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சிக்கு உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு பலரும் குளிர்காலத்தில் உடலை உஷ்ணத்துடன் வைக்க இஞ்சியை பல வகைகளில் அதிகமாக பயன்படுத்துவதுண்டு. அளவுக்கு அதிகமாக இஞ்சியை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்(shutterstock)

குமட்டல்: இஞ்சியில் சூடான தன்மை உள்ளது. எனவே இதை அதிகமாக உட்கொள்வது குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்

(2 / 7)

குமட்டல்: இஞ்சியில் சூடான தன்மை உள்ளது. எனவே இதை அதிகமாக உட்கொள்வது குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்(shutterstock)

தோல் பிரச்னைகள்: இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சரும பிரச்னைகள் அதிகரிக்கும். இஞ்சி எண்ணெயில் சில இரசாயனங்கள் உள்ளன, இது சிலருக்கு சருமத்தை எரிச்சலூட்டும். கண்கள் சிவத்தல், சுவாசிப்பதில் சிரமம், அரிப்பு, உதடுகள் வீக்கம், கண்களில் அரிப்பு மற்றும் தொண்டை பிரச்னைகள் போன்றவை ஏற்படலாம்

(3 / 7)

தோல் பிரச்னைகள்: இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சரும பிரச்னைகள் அதிகரிக்கும். இஞ்சி எண்ணெயில் சில இரசாயனங்கள் உள்ளன, இது சிலருக்கு சருமத்தை எரிச்சலூட்டும். கண்கள் சிவத்தல், சுவாசிப்பதில் சிரமம், அரிப்பு, உதடுகள் வீக்கம், கண்களில் அரிப்பு மற்றும் தொண்டை பிரச்னைகள் போன்றவை ஏற்படலாம்(shutterstock)

நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு: இஞ்சியை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.  நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால், அதிக இஞ்சி உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால், இஞ்சி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிகவும் குறையும். இந்த நிலை ரத்தச் சர்க்கரைக் குறைவு என்று அழைக்கப்படுகிறது

(4 / 7)

நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு: இஞ்சியை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.  நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால், அதிக இஞ்சி உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால், இஞ்சி சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிகவும் குறையும். இந்த நிலை ரத்தச் சர்க்கரைக் குறைவு என்று அழைக்கப்படுகிறது(shutterstock)

நீரிழப்பு: இஞ்சியின் சூடான தன்மை காரணமாக, அதை அதிகமாக உட்கொள்வது உடல் சூட்டை அதிகரிக்கும். இதன் காரணமாக வியர்வை வெளியேறி, உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாலம். இது நீரிழப்புக்கு காரணமாக அமையலாம்

(5 / 7)

நீரிழப்பு: இஞ்சியின் சூடான தன்மை காரணமாக, அதை அதிகமாக உட்கொள்வது உடல் சூட்டை அதிகரிக்கும். இதன் காரணமாக வியர்வை வெளியேறி, உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாலம். இது நீரிழப்புக்கு காரணமாக அமையலாம்(shutterstock)

இரத்தத்தை மெலிதாக்கும்: இஞ்சியில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் உடலில் இரத்தக் கட்டிகளை உருவாக்குவதைத் தடுக்கின்றன. நீங்கள் ஏற்கனவே இரத்தத்தை மெலிதாக்கும் மருந்தை உட்கொண்டிருந்தால், இஞ்சியை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்

(6 / 7)

இரத்தத்தை மெலிதாக்கும்: இஞ்சியில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் உடலில் இரத்தக் கட்டிகளை உருவாக்குவதைத் தடுக்கின்றன. நீங்கள் ஏற்கனவே இரத்தத்தை மெலிதாக்கும் மருந்தை உட்கொண்டிருந்தால், இஞ்சியை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்(shutterstock)

ஒவ்வாமை: இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சில நேரங்களில் ஒவ்வாமை பிரச்னையை அதிகரிக்கும். இதன் காரணமாக தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் தொண்டை ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படலாம்

(7 / 7)

ஒவ்வாமை: இஞ்சியை அதிகமாக உட்கொள்வது சில நேரங்களில் ஒவ்வாமை பிரச்னையை அதிகரிக்கும். இதன் காரணமாக தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் தொண்டை ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படலாம்(shutterstock)

மற்ற கேலரிக்கள்