காலை உணவாக முளைகட்டிய பயறு சாப்பிடுகிறீர்களா? நீங்கள் தவறாமல் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்
- பலரும் காலை உணவில் முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்கிறார்கள். ஆனால் முளைகள் சாப்பிடுவதற்கு முன் சில விதிகளை சரியாக பின்பற்றினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கலாம்
- பலரும் காலை உணவில் முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்கிறார்கள். ஆனால் முளைகள் சாப்பிடுவதற்கு முன் சில விதிகளை சரியாக பின்பற்றினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கலாம்
(1 / 6)
உடற்பயிற்சி மீது ஆர்வம் உள்ளவர்கள் முளைகட்டிய பயறு வகைகளை ஆற்றலின் சக்தியாக கருதுகின்றனர். ஜிம் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களின் முதல் தேர்வாக இவை இருக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் முளைகளை பலரும் சாப்பிட விரும்புகிறார்கள். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர முடியும். முளைத்த தானியங்களில் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்துற்கு அவசியமானவை. ஆயுர்வேதத்தின் படி, முளைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பெற எப்போதும் கவனமாக அவற்றை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது
(2 / 6)
தானியங்களை அரைக்க எப்போதும் சுத்தமான பாத்திரங்களைப் பயன்படுத்தவும். முளைகளை ஊறவைக்கவும், கழுவவும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்தவும். குழாய் நீரில் அதிக குளோரினேஷன் இருந்தால், அதை வடிகட்டி அல்லது கொதிக்கவைத்து பயன்படுத்த வேண்டும்
(3 / 6)
தானியங்களை ஊறவைக்கும் முன் நன்றாகக் கழுவவும். ஊறவைத்த பிறகு, முளைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை, ஒவ்வொரு 12 மணி நேரத்துக்கும் ஒரு முறை நன்கு கழுவி உலர வைக்கவும். கோடையில், ஒவ்வொரு 6 மணி நேரத்துக் இவ்வாறு செய்ய வேண்டும்
(4 / 6)
முளைத்த தானியங்களை உண்ணும் முன் எப்போதும் அதை நன்கு சரிபார்க்கவும். தானியங்களில் நிறமாற்றம் அல்லது துர்நாற்றம் இருந்தால், அவற்றை தூக்கி எறியுங்கள். ஆயுர்வேதத்தின் படி, முளைத்த தானியங்கள் இயற்கையில் குளிர்ச்சியாகக் கருதப்படுகின்றன. இது வாதம் மற்றும் கபம் போன்ற சில தோஷங்களை மோசமாக்குவதாக கூறப்படுகிறது
(5 / 6)
முளைத்த தானியங்களை உட்கொள்பவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், பாக்டீரியா தொற்று அபாயத்தைத் தவிர்க்க அவற்றை லேசாக சமைப்பது நல்லது
மற்ற கேலரிக்கள்