Tender Coconut: தினமும் இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
- இயற்கை அளித்த பெரும் கொடையான இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
- இயற்கை அளித்த பெரும் கொடையான இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
(1 / 8)
வெளியின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிப்பதில் முதல் பொருளாக இருக்கிறது இளநீர். தினமும் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
(2 / 8)
தாகத்தை தணித்து உடலுக்கு புதுவித புத்துணர்ச்சி அளிக்கிறது. இளநீரில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்களும் ஏ,சி,கே உள்ளிட்ட சத்துக்களும் அதிகமாக இருக்கின்றன.
(4 / 8)
இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், நார்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் அதிக அளவு இருப்பதால், வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்க உதவும்.
(5 / 8)
இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருக்கிறது. எனவே அதனை பருகும் போது வயிறு நிறைந்து போகும். இதனால் அதிக அளவு தேவையில்லாத உணவுகளை எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது.
(6 / 8)
சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் இளநீரில் அதிகம் உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
(7 / 8)
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் வளர்வதை தடுக்கிறது. சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து இளநீர் தான்.
மற்ற கேலரிக்கள்