Benefits of Laughing: ‘கொஞ்சம் சிரிங்க பாஸ்’..வாய்விட்டுச் சிரித்தால் இத்தனை நன்மைகளா?
- 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பர். சிரிப்பின் பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம்.
- 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பர். சிரிப்பின் பயன்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம்.
(1 / 7)
சிரிப்பதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. மன அழுத்தத்துக்கு புன்னகை சிறந்த மருந்து. வாய்விட்டுச் சிரிக்கும்போது இதயத் துடிப்பு 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.
(2 / 7)
சிரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்தையும், நுரையீரலையும் நல்ல வழியில் தூண்டும்.
(3 / 7)
சிரிக்கும்போது ஜீரண சக்திக்கு உதவும் நீர் நமது உடலில் அதிகம் சுரக்கிறது. இதனால் நாம் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகிறது.
(4 / 7)
சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகளின் இயக்கம் மேம்படும். முகம் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் ஏற்படுவதுடன், தசை நார்கள் விரிவடைந்து முகத்தின் தோற்றத்தையும் மெருகேற்றும்.
(5 / 7)
ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் எண்டோர்பின் என்ற ஹார்மோன் வெளியாகும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி கொண்டது. இந்த ஹார்மோனின் வெளியீட்டால் உங்கள் மனது ரிலாக்ஸாகி, மனதில் ஒரு நல்ல உணர்வு எழுகிறது.
மற்ற கேலரிக்கள்